தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் 7 ஆம் நாள் இன்று 1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 21ம் திகதி இது திலீபனுடன் ஏழாவது நாள்.

தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் 7 ஆம் நாள் இன்று.

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 21ம் திகதி இது திலீபனுடன் ஏழாவது நாள். 

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடினேன் நேற்றைய பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் இந்த கேள்விதான் என் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்கொண்டிருந்தது காலை பத்துமணி வரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் என் கண்ணில் படவேயில்லை.

ஆனால் திடீரென்று இந்தியா ருடே பத்திரிகை நிருபரும் இந்திய தூர்தர்சன் தொலைக்காட்சி ஸ்தாபன படப்பிடிப்பாளரும் யோகியுடன் வந்து திலீபனை படம் பிடிக்கத்தொடங்கினர் இந்திய ருடே நிருபர் என்னிடம் திலீபனின் உடல் நிலையை பற்றி துருவித்துருவிக் கேட்டு்த் தெரிந்து கொண்டார் என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரதத்திலிருந்து இன்று வரை அவரின் உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக்கூறினேன். அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து என் மனதுக்குள் குடைந்து கொண்டிருந்த அந்தக்கேள்வியை கேட்டே விட்டேன்.

அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது. இந்திய அமைதி காக்கும் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன் எயாக்கொமாண்டர் ஜெயக்குமார் கடற்படைத்தளபதி அபய சுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும் உதவித்தூதுவர் வரவில்லை என்றும் திலீபனின் பிரச்சனையில் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரையில் எடுக்கவில்லை என்றும் யோகி கூறினார் அந்தப்பதிலை கேட்டால் அதை ஜுரணிக்க என் மனதிற்கு வெகு நேரம் பிடித்தது அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழுவிபரத்தையும் யோகி திலீபனிடம் விளக்கி கூறி என்ன செய்யலாம் என்று கேட்டார்.

பேச சக்தியற்று நடக்க சக்தியற்று துவண்டு கிடந்த அந்த கொடி தன் கண்களை திறந்து பார்த்து விட்டு வழக்கம்போன்று தன் புன்னகையை உதிர்த்தது. எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்கவேணும் ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தரவேணும் இல்லையென்றால் நான் உண்ணாவிரதத்தை கடைசி வரையும் கைவிட மாட்டன்.

ஒவ்வொரு வார்த்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில். படபடவென்று நடுங்கிய குரலில் மெதுவாக திடமாக திலீபன் கூறி முடித்தபோது யோகி மேடையில் இருக்கவில்லை.

இன்று ஓரளவு தென்புடன் இடையிடையே கண்களை திறந்து பார்த்தார் திலீபன் ஆனால் உடல் முழுவதும் ஒரு நோவும் வாயும் வறண்டு உதடுகள் பிளந்து கிடந்தன. மாலை 5 மணியளவில் மீண்டும் ஆழ்ந்து மயங்கிவிட்டான் திலீபன் நாடித்துடிப்பு 140 ஆக உயர்ந்திருந்தது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com