உலக சிறுவர் தினம், எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிறு அன்று இலண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

உலக சிறுவர் தினம், எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிறு அன்று இலண்டனில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!


சிறுவர் தினத்தன்று இலண்டனில் மாபெரும் கண்டன, கவனயீர்ப்பு போராடடம் ஒன்று சிறுவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின்  இறுதி போரின் இலங்கை அரசபடைகளிடம் கையளிக்கபட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கானதும், போரின் போது திட்டமிடப்பட்டு பெளத்த சிங்கள பேரினவாத அரசால் கொல்லபட்ட அப்பாவி சிறுவர்களுக்கான நீதி கோரலுக்குமான கண்டன கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப் போராட்டம் எதிர்வரும் 06/10/2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் தலை நகரான இலண்டன் டவுணிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தின் முன்னால், இலக்கம் 10ல் மதியம் 12.00 தொடக்கம் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச அரங்கில் எம் சிறுவர்களுக்கான நீதியை தேட ஒண்றிணையும் தரணமிது.

அன்பானவர்களே!
உங்கள் பிள்ளைகள், நண்பர்கள் உறவினர்கள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைத்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட
சிறுவர்களுக்காகவும் இராணுவம் மற்றும் அரசாங்க சக்திகளாலும் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களுக்காகவும் சிறுவர் தினத்தன்று கவனயீர்ப்பு போராட்டம் சிறுவர்களால் நடாத்தப்படுவது நாம் இன்றும் எமக்கு இழைக்கப்பட அநீதிகளுக்கு நீதிவேன்டி நிக்கின்றோம் என்பதனை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும்.

முக்கியமாக லண்டன் மாநகரில் மற்றும் வெளியில் இருப்பவர்கள் இப்போராட்டத்தின் முக்கியத்தை கருத்தில் கொண்டு உங்கள் பிள்ளைகளை அன்றயதினத்தில் அழைத்து வந்து போராட்டத்திற்கு வலுச்சேருங்கள்

சிறுவர் தினமான அன்று எமது சிறுவர்களுக்கான நீதிவேண்டி ஓங்கி குரல்
கொடுப்போம்.சிறுவர் தினம் ஏன்? என்பதற்கான சர்வதேச சட்ட விதிமுறைகள் விளக்கங்கள் அடங்கிய பதிவையும் இதில் நினைக்கின்றேன் படித்து பாருங்கள் எமது மண்ணில் எமது சிறுவர்களுக்கான நீதி தேவை என்று போராடத்தூன்டும்.

உலக சிறுவர் தினம்
ஒக்ரோபர்-01ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது.

சிறுவர்துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.

சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.

இவ்வாறான உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது.

மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட அனைவரையும்சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.

ஆனால் இன் றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்

* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்!
* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்!
* பாலியல்ரீதியான துஷ்பிரயோகம்!
* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்!
* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்!

குறிப்பாக உலகில் உள்ள அனைத்துசிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தேவருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற் கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர்.

மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்றநிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும்சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர்தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம்.

மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில்எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியதுஅவசியமாகும்.

நன்றி
சுகுணன் (அரபாத்)
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com