தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த திலீபனுக்காக நாவற்குழிக்கு வாருங்கள்……!"தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த திலீபனுக்காக நாவற்குழிக்கு வாருங்கள்......!"

தியாக தீபம் திலீபன்அவர்களின் நினைவிலான இறுதிநாள் நடைபயணத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாளை (26) வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி சந்தியில் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளனர்.

தியாகி திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும், தமிழ் மக்களின் அபிலாசைகள் வெற்றி பெறவும், மாவீரர்களின் விருப்பங்கள் நிறைவேறவும், அனைத்து சமூக தரப்புக்களையும் ஒன்றிணையுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் அவர்களின் நினைவுவாக முன்னெடுக்கப்பட்டுவரும் நடைபயணம் இன்று எழுதுமட்டுவாளை வந்தடைந்தது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத் தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் மேலும் கூறுகையில்:-

தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபயணம் வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகள் வலுவடைவதற்கும், வெற்றிபெறுவதற்குமாக நடக்கின்ற நடைபயணம் வெற்றிபெற வேண்டும் என்பதற்குமாக திலீபனை நேசிக்கின்ற, அவரின் உன்னத தியாகங்களை மதிக்கின்ற அனைத்து உணர்வாளர்களும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்று நாம் கோரி நிற்கின்றோம்.

26ஆம் திகதி இறுதி நாளன்று நாவற்குழி சந்தியில் இருந்து அந்த நடைபணயத்தை தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி நோக்கிச் சென்று நிறைவடையவுள்ளது.

தியாகி திலீபன் அவர்களின் நினைவு சுமந்து நாளை 26.09.19 காலை 8 மணியளவில் அலையென தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். நடைபயணம் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் திலீபன் உயிர் நீத்த இடத்தை சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com