யேர்மன் தலைநகரில் வேர் ஊன்றிய தியாகம்!

யேர்மன் தலைநகரில் வேர் ஊன்றிய தியாகம்!

தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் 32 ஆவது நினைவு நாளை முன்னிட்டு யேர்மனி பேர்லினில் மாநகரில் Wilmersdorf மாவட்டத்தில் "வேர் ஊன்றும் தியாகம்" நினைவுக்கல் மற்றும், மரம் நடுதல்" நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

எமது இனவிடுதலைப் போராட்டத்தில் திலீபன் அவர்கள் செய்த ஒப்பற்ற தியாகங்களை நினைவுகூரவும், எமது இனத்தின் வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும், பல்லின மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையிலும் நினைவுக் கல்லில் தியாக தீபம் திலீபன் அண்ணாவை பற்றிய குறிப்பு யேர்மனிய மொழியில் பதிக்கப்பட்டது. இவ் நினைவு வணக்க நிகழ்வில் தியாக தீபம், லெப் கேணல் திலீபன் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிந்து வணக்கம் செலுத்தப்பட்டதோடு, தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் முதன்மை எண்ணங்களில் ஒன்றான பெண்களின் தலைமைத்துவம் பற்றிய விளக்கத்தை சகோதரி ஒருவர் வழங்கியதோடு, தியாக தீபம் திலீபன் அண்ணா நினவுசுமந்த கவிதையும் , கருத்துக்களும் வழங்கப்பட்டு, நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.






















Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com