தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் மீது தொடரும் அச்சுறுத்தல்!
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களுக்கு பயங்கரவாத தடுப்புபிரிவினால் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கான அழைப்புக் கடிதம் காவல்துறையினர் ஊடாக ஊடகவியலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேட்பாரின்றி தமிழ் ஊடகவியலார்களை அச்சுறுத்தும் சிறிலங்கா காவல்துறையின் அச்சுறுத்தல்கள் தமிழ் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து கடடவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் செப்டெம்பர் 25ஆம் திகதி, முற்பகல் 10 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு 2ஆம் மாடியில், ஆஜராகுமாறும், அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள். அவர்களை அச்சுறுத்துவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் மக்களை காப்பவர்கள். மக்கள் அவர்களை காக்க வேண்டும்!