நீராவியடி விவகாரம் மக்கள் தம்மை தேடி வராத காரணத்தினாலேயே நாம் தலையிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்

நீராவியடி விவகாரம் மக்கள் தம்மை தேடி வராத காரணத்தினாலேயே நாம் தலையிடவில்லை- எம்.ஏ.சுமந்திரன்

சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கலை தடுப்பதற்கான வல்லமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் மக்கள் தம்மை தேடி வராத காரணத்தினாலேயே தாம் அதில் தலையிடவில்லை என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீவிர நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று சனிக்கிழமை நடத்தியிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஊகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த சுமந்திரன், வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com