தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும்!

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் ஏகமனதாக எடுப்பது அவசியம். எனினும் அந்த முடிவை எடுப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும்.

இது விடயத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை ஈடுபடும் என்பதான செய்திகள் ஏலவே வெளி வந்திருந்தன.

இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி தனித்து எடுக்கக்கூடாது என் பது மிகவும் முக்கியமானது.

கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சையான முடிவுகள் பெரும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்தும் அதே தவறை விடக்கூடாது என்பதுதான் இங்கு கவனிக் கப்பட வேண்டியது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விட யத்தில் எழுத்து மூலமான உத்தரவாதங்கள் எதனையும் தாம் தரமுடியாது என சஜித் பிரேமதாஸவும், கோத்தபாய ராஜபக்­வும் பகிரங்க மாக அறிவித்துள்ளனர்.

எழுத்து மூலமான உறுதி மொழிகளைத் தர முடியாது என்றால், அவர்களின் வாய்மொழி உத்தரவாதங்களைத் தமிழ் மக்கள் எப்படி நம்ப முடியும் என்ற கேள்வி எழும்.

எனவே எழுத்து மூலமான உத்தரவாதத்தைத் தர முடியாது என்றால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் உண்டா என்று ஆராய்வது அவசியம். தவிர, எழுத்து மூலமான உத்தரவாதத்தைத் தரமுடியாது என்று கூறுகின்றவர்கள் அந்த முடிவில் இருந்து விலகி; இல்லை நான் எழுத்து மூலமான உத்தரவாதத்தைத் தருகிறேன் என்று கூறும் வகையிலான தந்திரோ பாயங்களைக் கையாள வேண்டும்.

அதாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது மட்டும் தான் எங்களுக்கு இருக்கக் கூடிய ஒரே தெரிவா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் மாற்றுவழி முறைகளைத் தமிழ் மக்கள் பிரயோகிக்க முடியுமா? என்பது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

இவை தவிர, இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகள் உன்னிப்பான கவனம் செலுத்தியுள்ளன.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யாராக இருக்க வேண்டும் என்பதில் வெளிநாடுகள் மிகுந்த கருசனை செலுத்துகையில், அத்த கைய நாடுகள் தமிழ் மக்களின் ஆதரவு குறித்த வேட்பாளருக்காக இருக்க வேண்டும் எனக் கருதும். இத்தகைய வெளிநாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை நாடி பிடித்துப் பார்த்து அந்த நாடுகள் ஏதேனும் உறுதிமொழிகளை, உத்தர வாதங்களை மறைமுகமாகவேனும் தர முடி யுமா என்பது பற்றியும் ஆராயலாம்.

இதில் எது தமிழ் இனத்துக்குச் சாதகமாக வருகிறதோ அந்தத் தெரிவை எடுப்பதுதான் புத்திசாலித்தனம். எனினும் இதனைத் தனித்து ஒரு அரசியல் கட்சியால் மட்டும் செய்ய முடியாது.

மாறாக அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன் றாகக்கூடி தீர ஆராய்ந்து பொருத்தமான முடிவுக்கு வர வேண்டும். இதைவிடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி இம் முறையும் தனித்து முடிவெடுத்தால் தமிழர் தலையில் மீண்டும் மண் கொட்டப்படுகிறது என்பது தான் அர்த்தம்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com