ஒரு தமிழனுக்காக சிறை சென்ற சிங்கள அமைச்சர்!


இவர் ஒரு சிங்களவர். அது மட்டுமல்ல பிரதி அமைச்சரும்கூட. இவர் பெயர் பாலித்த தேவரப் பெரும களுத்துறையில் மரணித்த தமிழர் ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது தோட்ட முதலாளி தடுத்துள்ளான்.

இதைக் கேள்விப்பட்ட இந்த சிங்கள அமைச்சர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று தானே இறந்த தமிழனின் உடலை காவிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்துள்ளார். இதனால் இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேதனை என்னவென்றால் தோட்ட தொழிலாளர்களிடம் மாதம் மாதம் சந்தாப் பணம் பெற்றுக் கொள்ளும் எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் இதில் அக்கறை காட்டவில்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில் பொதுபலசேனா இனவாதிப் பிக்குவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிய தமிழ் தலைவர்களும்கூட இந்த அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரவில்லை.

இவர் கிளிநொச்சி வந்து தமிழர் ஒருவர் கிணற்றை தூர் வாரிக் கொடுத்த போது ஸ்டண்ட் அடிக்கிறார் என்று சிலர் கூறினார்கள். இப்போது இன்னொரு தமிழருக்காக சிறை சென்றுள்ளார். இதையும் அரசியல் விளம்பரம் என்று அந்த சிலர் சொல்லக்கூடும்.

ஆனாலும் இந்த சம்பவம் மூலம் தெரியவந்துள்ள உண்மை என்னவெனில் சிறிய அறைகளில் வாழ்நாள் எல்லாம் கழித்துவரும் மலையக தமிழர்களுக்கு உடல் அடக்கம் செய்ய ஒரு 6 அடி நிலம் கூட சொந்தம் இல்லை எனபதே. இலங்கை அரசே! அமைச்சர் பாலித்த பெருமவை உடனே விடுதலை செய்!

(ஜெயம் துவா)
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com