நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

தியாக தீபம் திலீபன் அவர்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) நல்லூரில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின்  நினைவாலயத்திலும், தியாகி திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இடத்திலும், உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சுடரினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர். குறிப்பாக சிறுவர்களுடன் நிகழ்வில் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்தது.























Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com