தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் மாத்திரமே இடம்பெறும் என மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று தியாகதீபம் திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் இடம்பெறும்.

அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாக 9.00 மணிளயவில் நினைவுத் தூபிக்கு முன்னால் ஒன்று கூட வேண்டும். நிகழ்வின் நினைவுச் சுடரினை ஏற்றும் மாவீரர்களின் பெற்றோரை மாநகரசபை தேர்வு செய்துள்ளது.

நினைவுச்சுடரை தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தலாம் என்றும் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபியை புனரமைப்புச் செய்துவிட்டு நிகழ்வை பொறுப்பேற்று நடத்தியிருந்தால் உண்மையான உணர்வாக இருந்திருக்கும்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com