நீதிமன்றத் தீர்ப்பை மீறித் தேரர்கள் அடாவடி! கூட்டமைப்பு தலைமறைவு!

நீதிமன்றத் தீர்ப்பை மீறித் தேரர்கள் அடாவடி! கூட்டமைப்பு தலைமறைவு!

மேதாலங்க தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாம் அருகில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (23) மதியம் 12 மணிக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்து. இந்நிலையில் குறித்த நீதிமன்ற தீர்ப்பை மீறி மேதாலங்க தேரரின் உடலை தற்போது பிறிதொரு இடத்தில் தகனம் செய்ய தேரர்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள முயற்சித்து வருகின்றனர்.

இதனால் நீராவியடிப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்ய பாதுகாப்பு படையினர் உட்பட பௌத்த தேரர்கள் முயற்சித்து வந்தனர். இதனையடுத்து அவரது உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்வதற்கு தடை கோரி பிள்ளையார் ஆலயத் தரப்பினர் தாக்கல் செய்த வழக்கில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல் தகனம் தொடர்பான தீர்ப்பு விசாரணை இன்று (23) காலை முதல் இடம்பெற்றது.

விசாரணை முடிவில் தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com