சுமந்திரன் சொல்லுவது பச்சை பொய்.


ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 1994 ஆம் ஆண்டில் சமஷ்டி ஏற்பாடொன்றைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். 2005 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் இதுபோன்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால் இரு தடவைகளும் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என திரு சுமந்திரன் அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியாகும் “இந்து” பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கிறார் (http://www.ft.lk/…/Sri-Lankan-Tamils-disappointed…/14-685173)
சுமந்திரன் சொல்லுவது பச்சை பொய். திரு ரணில் விக்கிரமசிங்கே அவர்கள் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டி இட்ட போது சமஸ்டி தொடர்பான எந்த உறுதிமொழிகளும் அவரின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்க வில்லை.

உண்மையில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அறிக்கையில் இரண்டு பிரிவுகள் இருந்தன . முதல் பிரிவு மூன்று அம்சங்களைக் கொண்டு இருந்தது – பட்டினிக்கு முடிவு, வேலைவாய்ப்பு மற்றும் பிரிவினைவாதத்திற்கு முடிவு ஆகியன அதன் தலைப்புகளாக இருந்தன . இரண்டாவது பிரிவு சுனாமி புனரமைப்பு முதல் பெண்களின் உரிமைகள் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் வரை இருபது பகுதிகளைக் கொண்டு எழுதப்பட்டு இருந்தது.

தேர்தல் அறிக்கையின் பிரிவு 3 இன் கீழ் பிரிவினைவாதத்தை தோற்கடிப்போம் என்கிற தலைப்பில் ஐக்கிய இலங்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு மூலம் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம் என மட்டுமே சொல்ல பட்டு இருந்தது .
We will bring about a permanent resolution to the ethnic problem through a political solution based on a United Sri Lanka. http://www.asiantribune.com/unp%E2%80%99s-presidential-elec…இதுமட்டுமல்லால் 2015 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பின்னர் இதே “இந்து” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஒரு போதும் தான் சமஸ்டி கட்டமைப்புக்கு தயாராக இருக்க வில்லை என சொல்லி இருந்தார் No, we did not support federalism. We had brought in 13th Amendment. We supported devolution.
https://www.thehindu.com/…/sri-lankan-pe…/article7544520.ece சந்திரிக்கா தேர்தல் காலத்தில் சமஸ்டி தொடர்பாக சொல்லப்பட்டு இருந்தது என்பதை நிரூபிக்க தேர்தல் அறிக்கைகள் இப்போது இல்லை .ஆனால் அவரின் ஆட்சி காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்கிற தீர்வு திட்டம் முன்வைக்க பட்டது .அது சமஸ்டி அல்ல .ஆனால் இன்று தமிழரசு கட்சி பேசும் தீர்வு திட்டங்களுடன் ஒப்பிடும் பொது மிக முன்னேற்றகரமான முன்மொழிவு என்பது உண்மை .. ஆனால் அப்போது புலிகள் காட்டில் இருந்தனர்.. அதை ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான தான் பாராளமன்றத்தில் தீயிட்டு கொளுத்தியது .அதே போல இதே சந்திரிக்கா தான் JVP யுடன் சேர்ந்து ஒன்றுமே இல்லாத சுனாமி பொதுக்கட்டமைப்பை நிராகரித்தார்.

ஆகவே கடந்த 70 ஆண்டுகால சுதந்திர இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழர் பிரச்சனைகளை நேர்மையாக கையாளவில்லை . இதயசுத்தியுடன் தீர்வு தேட முயற்சிக்கவில்லை .புலிகள் தான் தீர்வை நிராகரித்தார்கள் /தீர்வுக்கு தடையாக இருந்தார்கள் என சுமந்திரன் சொல்லுவது உண்மையானால் புலிகள் களத்தில் இருந்து அகற்றப்பட்டு 10 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் சுமந்திரன் விசுவாசமாக இருக்கும் UNP ஆட்சி காலமாகும் . இந்த 4 ஆண்டுகாலத்தில் சாதித்தது என்ன ? கல்முனைக்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியவில்லை.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com