திலீபனிற்குத் தேவையான உணவை உங்களால் தான் சமைக்க முடியும்! பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்…

திலீபனிற்குத் தேவையான உணவை உங்களால் தான் சமைக்க முடியும்!

பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்…

திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே!
பார்த்தீபனின் பாதம் தொழுவோரே!
ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே!
அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்!

எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான், சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும், உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும், இன்பம் பெருகப், பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும், உள்ளம் உருக, உருகக் கண்ணீர் விட்டுப் பிரிச்ச ஊரும், திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து, நாளை வருவார், நானை வருவார், என்றே தங்கள் இதயம் வதைத்து கொலைஞர் பிடித்த உறவை நினைத்துக் கதறும் மனங்கள் இருக்கும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

சதியும் வெறியும் ஒன்றாய்க் கலந்து கருணை கனிமை எதுவும் மறந்து, எங்கோ பிறந்து மனிதம் துறந்து, எங்கள் மண்ணில் மரணம் விதைத்து துயரச் சுமையுள் எம்மைத் திணிக்கும் கொடுமைப் படைகள் எரியும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

உயிரை, உடலை, உறவைத், துறந்து உணர்வு முழுதும் தமிழைக் கலந்து, விடியும் காலைக் கதிராய், விரிந்து தமிழர் தேசக் கனவை வரித்து மண்ணின் மானம் பெரிதாய் மதித்து, மண்ணுள் உறங்கும் மாந்தர் கேட்கும் விடுதலை வந்து சேரும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

சொந்த சுகங்கள் அனைத்தும் துறந்து, துணிவுச் சிறகை மனதில் அணிந்து, தலைவன் திசையில் பயணம் தொடர்ந்து, அணியாகத் திரளும் தமிழர் படையில், எழுச்சித் தீபம் எரியும் வரைக்கும், மக்கள் புரட்சி மண்ணில் வெடித்து, தமிழர் முழுதும் புலியாய் விரைந்து தாயக மெங்கும் போரிடும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

திசைகள் எதிலும் பகையை முடித்து, நிலங்கள் முழுதும் விரைவில் பிடித்துப், புலியின் கொடியை கருத்தில் எழுத்து, வெல்லும் சேதி சொல்லும் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்!

ஆகவே…! பசித்த வயிற்றோடு பாடையேறிய எங்கள் பார்த்தீபன் கனவுகள், மேடையேறி முழங்கவல்ல தீபமேற்றி வணங்கவல்ல, களத்திலேறிப் பகை முடிக்க நெருப்பிலேறிக் கொடி பிடிக்க, தீர்வெடுங்கள் திலீபனிற்குத் தேவையான உணவை, உங்களால் தான் சமைக்க முடியும்.

எங்கள் திலீபன் மட்டுமல்ல, பல்லாயிரம், ஆயிரம், மாவீரர்களும் தமிழீழம் எனும் தாகத்துடன் தான் வனத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நட்ஷத்திரங்களாக!

எங்கள் திலீபன் மட்டுமல்ல, மாவீரர்கள் மட்டுமல்ல, மாவீரர்களை பெற்ற பெற்றோர்களும், மாவீரர்கள் கட்டிய துணைகளும், அவர்கள் பெற்ற பிள்ளைகளும் தான் இன்று பசியுடன் தவிக்கின்றனர், நடை பிணங்களாக. அவர்களுக்கான பசியைப் போக்க வேண்டியதும் உங்கள் அனைவரது கடமையாகும்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com