சாவு தின்றதே! சாவு தின்றதே! தங்க மேனியை! சாவு தின்றதே!

சாவு தின்றதே!
சாவு தின்றதே!
தங்க மேனியை!
சாவு தின்றதே!


குரல் எடுத்ததோர் குயில் படுத்தது!
குமுறி நின்றதோர் புயல் படுத்தது!
தர மறுத்திடும் உரிமை பெற்றிட!
தன் வயிற்றிலே போர் தொடுத்தது!

இன்னும் காதிற்குள் ஒலிக்கிறது புதுவையின் வரிகள். நல்லூர் வீதியில் அவனின் நினைவு நாளின் கடைசி நேரமாகிய காலை 10.48 மணிக்கு ஆலய வீதியில் எழுந்து நின்றவர்கள் அழாமல் நின்றது அபூர்வம்.

எத்தனையோ ஆண்டுகள் அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நெஞ்சு வெடிக்கும். தொண்டை அடைக்கும். கண்ணீர்த்துளிகள் தாமாகவே வந்து வீழும். சயனைட் உட்கொண்டு சிவகுமாரன். தலைவனின் மடியில் சங்கர். தனது துப்பாக்கியை கொடுத்து 'என்னை சுட்டுப் போட்டு துவக்கை தலைவரிட்ட கொடு' எண்டு கட்டளை இட்டு சாவை அணைத்த தளபதி சீலன்(சார்ல்ஸ் அன்ரனி). புன்முறுவலோடு புறப்பட்டு புகையாக வெடித்த மில்லர். துளி நீரும் இன்றி அணு அணுவாக சாவை அணைத்த திலீபன். விடுதலை வரலாற்றில் சாவுகளுக்கு புதிதாய் சரித்திரம் சேர்த்து வியக்கவைத்தனர்.

40.000 ற்கு மேலே மண்ணின் விடுதலைக்காய் விதையாகி உள்ளார்கள். ஆனால் திலீபன் எம் கண் முன்னாலே, எமக்கு தெரிய துடிக்க துடிக்க அணு அணுவாக ஏற்ற சாவு எம்மை வெகுவாகவே பாதித்தது.

எம்மை காப்பாற்றுவார்கள் என நினைத்தவர்களே எம்மை அழித்த அத்தியாயம் தொடங்கும் காலம் இது.

மனதை விட்டகலாத ஒரு நிகழ்வு!
மனச்சாட்சி கதவை உலுப்பும் ஒரு நிகழ்வு!
மானமுள்ளவர்களை ஆட்டம் காணச்செய்த ஒரு நிகழ்வு!
வீரத்தமிழினம் மீண்டும் உலகில் நிமிர்ந்த ஒரு நிகழ்வு!
ஈழம் தா என்றோ, அதைத்தா என்றோ, இதைத்தா என்றோ கேட்கவில்லை. கேட்டது வெறும் 5 கோரிக்கைகள்!

அதிலே ஒன்றுக்குகூட இணைந்து வரமுடியாதவர்கள் எமக்காக எதையும் செய்வர் என்று எதிர்பார்ப்பது தப்பு.

எம்மை நாமே ஆழும் காலம்!
வெல்லும் காலம்!
இதயத்தில் அன்று மூட்டிய நெருப்பு இன்னமும் அணையவில்லை.

இப்பொழுதுதான் கனன்று எரிகிறது. காலம் பதில் சொல்லும். வேள்வி நாயகணுக்கு எங்கள் வீரவணக்கங்கள்.
"வெல்வோம். நல்லை வீதியில் அடுத்தமுறை உன் நினைவுக்கல்லில் சந்திப்போம்"
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com