17ஆம் திகதி 'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி 'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும், ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் கண்காணிப்பு பயணத்தை நேற்று 12/10/2019. சனிக்கிழமை மேற்கொண்டனர்.

இதன் போது ஆளுநர் குறிப்பிடுகையில், 'இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்கு பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும். புலம் பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ். மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது.

இந்த விமான போக்கு வரத்தின் போது தற்போது தமிழ் நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com