சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ் கல்வியாங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க் கிழமை) காலை ஆரம்பிக்கப்படட போராடடம், கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர்.
அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது நூற்றுக் கணக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் காணாமல்
ஆக்கப்பட்டனர். எனினும் அச்சிறுவர்கள் இது வரையில் மீளக் கையளிக்கப்படவில்லை. இதனால் சரணடைந்த சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாத நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென உறவினர்கள் கோரி வருகின்றனர்.
இதற்கமைய சிறுவர் தினத்தை முன்னிட்டு தமது பிள்ளைகளான சிறுவர்கள் விடயத்தில் அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.