ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என்று தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து வேட்பாளர் சிவாஜிலிங்கம் வெளியேற வேண்டும் என ரெலோ வலியுறுத்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியான தகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை கட்டவிழ்த்து விட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு வரை இனப் படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள்.
இவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.