நந்திக்கடல் பேசுகிறது - நூல் வெளியீடு!


 ஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட, பின் போர்க் காலத்தை எழுத்து ஆவணமாகக் கொண்ட “நந்திக்கடல் பேசுகிறது” எனும் நூல் வெளியீடு இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் ‘மேஜர் சோதியா’ அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர். 

அருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார்.




Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com