திருகோணமலை- சேருநுவர பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் கை து செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்.கோண்டாவில் பகுதியில் இரு கிளைமோா் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
கருணா மீது சினைப்பா் தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், போ் கைது செய்யப்பட்டனா்.
இதன் தொடா்ச்சியாக இன்று யாழ்.கோண்டாவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ நிறையுடைய இரு கிளைமோா் குண்டு கள் மீட்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சம்பவம் தொடா்பாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனா்