ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் என்றும், விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிறைவேற்ற இடமளிக்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கங்களை கொண்ட அரசியல் கட்சிகளின் ஆதரவினை கோரவில்லை. தமிழ் மக்களின் ஆதரவினையே கோருகின்றோம். அரசியலமைப்பின் 13 வது திருத்த உள்ளடக்கங்கள் அனைவருக்கும் ஏற்றால் போல் பாதிப்பின்றி செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.