தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் - சம்பந்தனுடன் ஆலோசனை! பேரவையை சந்திக்க சம்மந்தன் மறுப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு, கிழக்கின் மதத் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர், இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட்து.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பு நடந்தது. தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென தெரிவித்து இரா.சம்பந்தன் குறித்த சந்திப்பை தவிர்த்துள்ளார்.
இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர்.
திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திருமலை ஆயர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் ஏற்பாட்டாளர்களாக இந்த பேச்சுக்களில் பங்கேற்றனர். இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இதன்போது, தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.