பேச்சுக்களுக்கு யாரும் அழைக்கவில்லை! கூட்டமைப்பைக் கைவிட்ட சிங்களத் தலைமைகள்!


ஜனா­தி­பதி தேர்­தலில் போட்டியிடும் சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க, உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சுவார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்­துள்ளார்.

வேட்பு மனுத் ­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­ வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­ திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான தீர்­மா­னங்­களை கூட்­ட­மைப்பு எடுக்­காது எனச் சுட்­டிக்­காட்­டிய சம்­பந்தன் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்கள் யாரும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய உத்­தி­யோக பூர்­வ­மான அணு­கு ­மு­றை­களை இது­வரை மேற்­கொள்­ள­வில்லை என்றும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட நிலையில் தேசிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் அவர் பெய­ரி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக சந்­தித்­தி­ருந்தோம். அதன் பின்னர் பிர­த­ம­ருடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­தோடு சஜித் தரப்பின் குழு­வி­னரும் சந்­தித்­தி­ருந்­தனர்.

அதே­போன்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இவை அனைத்­துமே உத்­தி­யோகப் பற்­றற்ற முறையில் தான் நடந்­தே­றி­யுள்­ளன.

இந்தச் சந்­திப்­புக்­களின் போது தீர்க்­க­மான முடி­வுகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதன்­பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுவும், ஒருங்­கி­ணைப்புக் குழுவும் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து கூடி ஆராய்ந்­தி­ருந்­தது. இதன்­போது பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் நாம் அவ­தா­னங்­களை செலுத்­தி­யி­ருந்தோம்.

தமிழ் மக்­களின் நியா­ய­மான விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே எமது இறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தென்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ளோம். தற்­போ­தைய நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் தங்­களின் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர். தமது பிர­சா­ரங்­க­ளையும் மெது­வாக ஆரம்­பித்­துள்­ளனர்.

ஆனால் எந்­த­வொரு தரப்­பி­னரும் இது­வ­ரையில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­னையோ அல்­லது கொள்­கைத்­திட்­டத்­தி­னையோ வெளிப்­ப­டுத்­த­வில்லை. ஆகவே எடுத்த எடுப்பில் நாம் முடி­வு­களை எடுக்க முடி­யாது. இந்த விட­யத்தில் பொறு­மை­யு­டனும், நிதா­ன­மா­கவும் தீர்­மா­னிப்­ப­தற்கே தலைப்­பட்­டி­ருக்­கின்றோம். அந்த வகையில் தேர்தல் விஞ்­ஞா­பனம் மற்றும் கொள்­கைத்­திட்­டங்­களை வெளி­யிட்ட பின்னர் அவற்­றையும் நாம் கவ­னத்தில் கொண்டு ஆரா­ய­வுள்ளோம்.

இது­வ­ரையில் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்ள எந்­த­வொரு வேட்­பா­ளர்­களும் எம்­முடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு உத்­தி­யோக ப+ர்வமான அழைப்­புக்­க­ளையோ அறி­விப்­புக்­க­ளையோ மேற்­கொள்­ள­வில்லை. நாம் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டு­க­ளுடன் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ, கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வு­டனோ, அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வு­டனோ ஏனைய தரப்­பி­ன­ரு­டனோ பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

எமது நிபந்தனைகள் எமது மக்களினை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால், அதுபற்றி தற்போது எவ்விதமான இறுதி முடிவுகளையும் எடுத்திருக்கவில்லை. எழுத்து மூலமாக நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை கூட்டமைப்பாக கூடியாராய்ந்து யதார்த்த பூர்வமாக கையாள்வதற்கே முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com