அப்பாவின் வருகைக்காக, நாட்டின் தலைவர் நீங்கள் கூறிய வாக்குறுதி பொய்யாகாதென்று நாம் நம்பினோமே.? நீங்கள் கூறியதன் பின் இரண்டு சித்திரை வருடப் பிறப்பு சென்று விட்டது, எங்கள் அப்பாவைக் காண்பதற்கு எவ்வளவு ஆசையோடு காத்திருந்தோம். பொய் ஆக்கி எம்மை ஏமாற்றமடைய செய்து விட்டீர்களே..!
தங்கள் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் சிலநாட்களே உள்ளது. நம் நாட்டை ஆண்ட தலைவர்களில் தங்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஆட்கடத்தல்களும், காணாமல் போதல்களும் நடந்தது குறைவென்று கூறுகிறார்கள், நாட்டின் சிறந்த தலைவர் என்று கூறுகிறார்கள். தங்கள் ஓய்வு நேரப் பொழுதை சிறுவர்களோடு கழிக்கிறீர்களாம், நாம் அம்மாவையும், இழந்து அப்பாவையும் பிரிந்து வாழ்கிறோம், அப்பா இருந்தும் அநாதை என்ற நிலையில்தான் எமது வாழ்வு.
எம்வயதை உடைய ஏனைய சிறுவர்கள் தம் பெற்றோர்களோடு கூடி மகிழ்ந்து, எம் கண்முன் செல்லக் கதைகள் பேசி முத்தமிட்டு மகிழ்கிறார்கள்.
பெற்றவர்களோடு உந்துறுளியில் பயணம் செய்வதையும் பார்க்கும்போது, எம்மனம் விம்மி வெடிக்கிறது. எங்கள் அப்பாவும் எம்மோடு இருந்திருந்தால், நாமும் அப்பாவோடு ஆசையாக பாடசாலை போவோமே, நாம் எத்தனை நாட்களாக அழுதுகொண்டிருக்கிறோம்?
எங்கள் பிஞ்சு உள்ளத்தின் ஆசைகள் ஏக்கங்கள் உங்களிற்கு புரியாமலா உள்ளது மாமா..?
அப்பாவோடு சிறைச்சாலை வாகனத்தில் நான் ஏறியபோது அப்பாவோடு போக விட்டிருக்கலாம் நீங்கள், அப்பாவை விடுவதாக ஆசையை காட்டினீர்களே அன்று. எங்களிற்கு நீங்கள் கூறிய வாக்குறுதியை மறந்து விட்டீர்களா மாமா..?
எங்கள் பிஞ்சுக்கரங்களால் உங்களிற்கு கடிதம் எழுதினோம் அதையும் மறந்துவிட்டீர்களா..? ஏன் மாமா எங்களை ஏமாற்றினீர்கள்..?
நீங்கள் கருணை உள்ளம் உடைய ஒருவர் என்று தானே நாமும் நம்பியிருந்தோம். சித்திரை வருடப் பிறப்புக்கு முன் எங்கள் அப்பாவான ஆனந்த சுதாகரை சிறையில் இருந்து விடுதலை செய்து விடுவதாக நீங்கள் தானே கூறினீர்கள் மாமா..?! அந்த வார்த்தைகளை நம்பி சித்திரை வருடப் பிறப்பிற்கு புத்தாடையும் வாங்கி வைத்துவிட்டு காத்திருந்தோம் நாம்.

உங்கள் பதவிக் காலம் முடியப் போகிறது. இனி நாம் யாரிடம் போய் எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள் என்று கேட்போம்? தாயும் தந்தையும் இல்லாது நாம்படும் துயர்கள் உங்களால் உணர முடியவில்லையா..?
இன்னும் எம் நம்பிக்கை வீண் போகவில்லை. எமக்கு ஒரு பதில் சொல்லிவிட்டு போங்கள் மாமா. அப்பாவோடு சேர்ந்து நாம்வாழ கருணை கொண்டு உதவி செய்யுங்கள்! உங்களிடம் மன்றாடிக் கேட்கிறோம். அப்பாவின் வரவிற்காக காத்திருக்கும் பிள்ளைகள் நாம்.
எழுத்தாக்கம்-பிரபாஅன்பு.