"தமிழர் தரப்பு தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அவருக்கு தமது வாக்குகளை செலுத்தவேண்டும்-மு.திருநாவுக்கரசு
மூத்த எழுத்தாளரும், அரசியல் ஆசானும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவருமாகிய திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் கூறுகையில்..
"தமிழர் தரப்பு தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அவருக்கு தமது வாக்குகளை செலுத்தவேண்டும். அப்போது தான், தமிழர்களின் நியாயமான உரிமைகளை பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும்" என்று
ஆனால் அரசியல் கட்சிகள் மக்களுக்கு கூறும் அறிவுரை என்னவெனில், கோத்தா கொலை செய்வார், சஜித் பழிவாங்குவார், என்று கூறுகிறார்கள் அதிலும் T.E.L.O தலைவர்
செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், திரு.சிவாசிலிங்கம் அவர்களை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என்று பிரதேச வாதம் பேசுவதுடன், மக்களை காரணம் காட்டுகிறார்.
செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், திரு.சிவாசிலிங்கம் அவர்களை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என்று பிரதேச வாதம் பேசுவதுடன், மக்களை காரணம் காட்டுகிறார்.
இங்கே ஒரு கேள்வி என்னவெனில்?? ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் போட்டியிட்டாலே, சிங்கள தலைவர்கள், தமிழ் வேட்பாளர்களைக் கொலை செய்வார்கள் எனில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வைக் கேட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை சிந்திக்கவில்லையா? இது ஒரு புறம் இருக்கட்டும்..
ஊடகங்கள் ஏன் மு.திருநாவுக்கரசு அவர்களையும், தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கத் தயங்குகிறார்கள்?
சிங்கள அரசியல் தலைவர்களைக் காரணம் காட்டி, சிங்களது தலைவர்களுக்கு தமிழர்களை விலைபேசும், வெற்றிவாய்புள்ள தமிழரசுக் கட்சி, T.E.L.O , P.L.O.T ஆகிய இயக்கங்களும் முயற்சிக்கின்றன என்பதே இங்கு அப்பண்டமாக தெரியவரும் உண்மை.
அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் போலித் தேசியவாதம் பேசுவதற்கு சிங்களத் தலைவர்களிடமிருந்து பணத்தை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன ஒட்டு மொத்தத்தில் மாபெரும் அயோக்கியர்களிடம் தமிழினம் சிக்கியுள்ளது.
இனத்தை நேசிக்கும் சிவாசிலிங்கம் தவறானவாரக சித்தரிக்கப்படுகிறார் சிவாசிலிங்கத்தை சிவில் சமூகமும், யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து சரியான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து களத்தில் நிறுத்தவேண்டும்.
தவறு, குற்றம் செய்யாத ஒரு தமிழ் அரசியல் வாதியை உங்களால் காட்ட முடியுமா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், மரண தண்டனைப் பட்டியலில் இடம்பெறிருந்த திரு.சம்மந்தன், பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைவரானது எப்படி? திரு.நடேசன், திரு.புலித்தேவன் உட்பட்ட அரசியல் துறைப் போராளிகள் சரணடைந்த போது தலையிடிகளை விரும்பினால் வைத்துக்கொள்ளுமாறு கூறி, படுகொலை செய்வித்தது எப்படி??
கடந்த பத்தாண்டுகள் அவர்களது அரசியல் எப்படி இவர்கள் அனைவரும் சிவாசிலிங்கத்தை நோக்கி கைகாட்டுவது எந்த வகையில் என்பது புரியவில்லை!
இவர்கள் அனைவருடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உண்மையில் இனத்தை நேசிப்பவராக, திரு.சிவாசியைத்தான் நாங்கள் கருதவேண்டியுள்ளது.