காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே? சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்- திருகோணமலை

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே? சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்- திருகோணமலை

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிரந்தர நீதியை பெற்றுத் தருமாறு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 29 சிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இன்று சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிள்ளைகளுக்காக நீதியை பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் பீ.சர்மிலா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கோரிக்கை அடங்கிய மகஜரொன்றினை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் இருக்குமிடம் அழிந்துவிட உங்கள் உதவியை நாடி எழுதுகின்றோம். உங்கள் வழிகாட்டலில் இந்தக் குழந்தைகளை கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகிலேயே இலங்கை அரசாங்கமே 8 மாத குழந்தை கூட வலிந்து காணாமல் செய்த ஒரே நாடாக தனித்து நிற்கின்றது. இந்தக் குழந்தைகள் அனைவரும் தமிழ் குழந்தைகளே! இந்த தமிழ் குழந்தைகளில் பலரும் பத்தாண்டுக்கு முன்பு மே மாதம் போரின் முடிவில் எவ்வித கேடும் நேரிடாது என்று உறுதிமொழிகளை நம்பி இலங்கை பாதுகாப்பு படைகளிடம் பெற்றோர் தம் பிள்ளைகளோடு சரணடைந்தபோது வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

ஆனால் 10 ஆண்டுகள் காலம் கடந்த பிறகும் இந்த குழந்தைகளை பற்றியோ, அவர்களது பெற்றோர்கள் பற்றியோ அரசிடமிருந்து பதில் ஏதும் இல்லை எனவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில குழந்தைகள் இலங்கை பாதுகாப்பு படைகளால் பெற்றோர் கடத்தப்பட்ட போது உடன் சென்று காணாமல் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்த குழந்தைகள் இவ்வாறு சரண் அடைந்து கடத்தப்பட்டதற்கு சாட்சிகள் பலர் உள்ளனர். பல்லாண்டு காலமாய் இந்த குழந்தைகளின் உற்றார், உறவினர்களும் இந்த குழந்தைகளை தேடி அலைகின்றார்கள். இலங்கையில் மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கூட இலங்கை பாதுகாப்பு படைகளும் இராணுவ உளவுத்துறையின் செய்யும் கேடுகள் உட்பட எத்தனையோ தடைகள் இருப்பினும் இந்த தேடல் தொடர்கிறது.

குடியரசுத் தலைவருக்கும், தலைமை அமைச்சரும் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் கூட இலங்கை அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இந்த தமிழ் குழந்தைகள் பற்றி எவ்வித விபரங்கள் ஏதும் தர மறுத்து வருகிறது.

இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க 2016ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் நகரில் ஒரு பொது நிகழ்வில் இப்படி சொன்னார். மே மாதத்தில் போர் முடிவில் இலங்கை பாதுகாப்பு படைகளிடம் சரண் அடைந்தவர்கள், இப்போது உயிருடன் இல்லை, எங்கள் குழந்தைகளும் உயிருடன் இல்லை என்று கவலைப்படுகிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 29 தமிழ் குழந்தைகள் மற்றும் சிறார்கள் பற்றிய செய்திகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குழந்தைகளின் படம், பெயர், வயது ஆகியவை உள்ளிட்ட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் இம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் 35 பெரியவர்களும் 40இற்கும் மேற்பட்ட சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com