நெடுங்கேணியில் கிணற்றில் வீசப்பட்ட இரு குழந்தைகள் பலி!

வவுனியா – நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பு பகுதியில், தாயினால் கிணற்றில் வீசப்பட்ட இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இன்று மதியம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் விபத்தில் மரணித்த அதே பகுதியைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவியே, இன்று தனது நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் வீசி விட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்றுள்ளனர்.

இதன் போது, அயலவர்களால் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும், மகன் உ.பவித்திரன் (2) கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிருடன் மீட்கப்பட்ட மகள் உ.சந்தசா (4) அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் வவுனியா கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் கணவன் இறந்த விரக்தியில் இருந்த நிலையிலேயே தாய் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தைகளைப் பறிகொடுத்த தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com