சர்வதேச சிறுவர்கள் தினத்தில், சிறுவர்களின் புகைப்படங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!-வவுனியா

சர்வதேச சிறுவர்கள் தினத்தில், சிறுவர்களின் புகைப்படங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!-வவுனியா

இறுதி யுத்தகாலத்தில் குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விபரங்கள் அடங்கிய நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, பிரபாகர குருக்கள் உள்ளிட்டோரும் இந்த நூலினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

சர்வதேச சிறுவர் தினமான இன்று, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

வவுனியாவின் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பத்து மணிக்கு குறித்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுத்திரு, கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே, குடும்பமாக ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் எங்கே, பத்து வருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதன்போது அவர்கள் இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கான மகஜரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com