தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்!
தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகளோ, அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ விரைந்து முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், இதனை யார் முன்னெடுப்பது எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
எமது கட்சி தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என மத்திய குழுவில் முடிவெடுத்துள்ளோம். எமது கட்சிதான் முன் நிற்கவேண்டும் என்று இல்லை. தமிழ்த் தேசியம் தொடர்பில் செயற்படுகின்ற கட்சிகளோ, பொது அமைப்புக்களோ இதனை முன்னெடுக்கலாம்.
விரைவாக முன்னெக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இனி வருகின்ற காலமானது அனைத்து விடையங்களிலும் அவதானிப்புக்களையும் தூர நோக்கங்களையும் சிந்தித்து செயலாற்றுகின்ற காலமாகவே உள்ளமையினால், மேற்குறித்த விடையங்களை செயற்படுத்துவதற்கு ஏற்ப திடமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழத் தேசிய விடுதலையை அடைவதற்காக நீண்ட காலமாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயக போராட்டம், ஆயுதப் போராட்டம் என்றிருந்த நிலையில் ஆயுதப் போராட்டமானது சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் மௌனிக்கப்பட்டது.
அதே சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களுடைய போராட்டமானது சென்று தமது இலக்குகளை அடையவேண்டும். இன்றைய சூழலில் தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற கட்சிகள் சிதைவடைந்து நிற்கின்ற நிலையே காணப்படுகின்றது. இந்த சிதைவானது எதிர் காலத்தில் பெரும்பான்மை கட்சிகள் வடக்கு கிழக்கில் வேரூன்றுவதற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.
இத்தகைய நிலை உருவாகுமானால் இன்று ஏற்பட்டிருக்கின்ற பிளவுகள் இன்னும் வலுவடைந்து தமிழ் தேசியத்தின் கொள்கைகள், இனப் பரம்பல் சிதைக்கப்பட்டு நில அபகரிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழின விகிதாசாரம் சிதைக்கப்படுகின்ற நிலையே ஏற்படும்.
இத்தகைய செயற்பாடுகள் தமிழ்க் கட்சிகள் தெளிவாக விளங்கிக் கொண்டு இதனை தடுக்கின்ற வகையில் செயற்படுவதற்கு ஓரணியில் திரளவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளே எடுக்கப்படாத நிலை ஒவ்வொரு கட்சிகளும் தனிப்பட்ட கருத்துக்களை விடுத்து தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவது தொடர்பில் பொது உடன் பாட்டுக்கு வரவேண்டும்.
இந்த முயற்சிக்கு தமிழ்த் தேசியம் தொடர்பில் செயற்படுகின்ற பொது அமைப்புக்களே, தமிழ்த் தேசியக் கட்சிகளே முன்வரவேண்டும். தனித்தனியே கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளைச் செய்யவே இடம் கொடுக்காது விரைவான முடிவை எடுத்து தமிழ் மக்களை ஓரணியில் திரள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.