ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாடுடம்!

ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாடுடம்!

முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை மீறிய பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்ப்பாண நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில் மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனைய பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’ ‘தேசிய சண்டியனான ஞானசார தேரரைக் கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com