தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்தும்.-ஜேக்கொப் றீஸ்-மொக்

தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்தும்.-ஜேக்கொப் றீஸ்-மொக்

தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ் அவர்களுக்கு பதில் அளித்த போதே, ஜேக்கொப் றீஸ்-மொக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்து வருவதாகவும், இது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜேக்கொப் றீஸ்-மொக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ் (Gareth Thomas) அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 03.10.2019 அன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் பொழுது, தமிழ் மக்களின் விவகாரத்தை மையப்படுத்தி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ், ‘2009ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களின் விடயத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளைப் பிரித்தானிய அரசாங்கம் எடுக்கப் போகின்றது?’ என்று கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய நாடாளுமன்றின் பொதுச் சபை முதல்வருமான ஜேக்கொப் றீஸ்-மொக் (Jacob Rees-Mogg) அவர்கள் பதிலளிக்கையில், தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்து வருவதாகவும், இது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதிலளித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com