இன அழிப்பு செய்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிக்க வேண்டும்! ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நிதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால், தமிழ் மக்கள் தனக்கு வாக்ளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள்.

பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும்.

இனப் படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். தற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கேத்தாபய மற்றும், மகிந் தராஜபக்ஷ தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப் பீடத்தில் இருந்த போதும் கூட தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள், இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாக இருந்து விட்டு, இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள்.  இவர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்ற சாரப்பட தமது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை இரு பிரதான கட்சிகளும் தெரிவிக்காத நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இங்கு வந்து பிரச்சாரங்களைச் செய்ய வருகின்றார்கள்.

ஒருவர் தான் யுத்தத்தை நடத்தியவர் என்றும் மற்றொருவர் யுத்தத்தை நாங்களே நடாத்தி முடித்தோம் என்றும் கூறுகிறார்கள் அது மட்டுமன்றி இவ்வாறு கூறியவர்கள் இருதரப்பிலுமாக நின்று எங்கள் மக்களை அழித்தவர்கள் தான் அப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை முறைப்படியாகத் தெரிவிக்காது வாக்குகளுக்காக எம்மை நோக்கி வருகின்றார்கள்.

இது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் காலங்காலமாக எங்களை ஏமாற்றி வருகின்ற சிங்களத் தலைமைகள் எம்மை அழித்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிப்பதற்காகவும் சர்வதேச சமூகத்திற்கு இன அழிப்புச் செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்காகவும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை அடக்கி ஆள்வதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இத்தகையவர்களுக்கு நாங்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும். சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியானதகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப் படுகொலை கட்டவிழ்த்து விட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு வரை இனப் படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள்.

இவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com