கனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா!

தன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.!
கனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா!
தன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ்த் தேசியவாதம்.

1949 தொடக்கம் பெட்டி வாங்கி பேரம் பேசிக் கண்டது என்ன? ஒருக்கா நாங்களும் யாரென்ற ஒற்றுமையா காட்டினா என்ன? பாராளுமன்ற தேர்தலில்  மட்டும் தான் ஒற்றுமை வேண்டுமா? எப்படித் தான் ஆதரவு அளித்தாலும், வெல்லப்போவது  அவங்கள் 2 பேரில் ஒருத்தன் தான்.

நாங்கள் எங்கள் ஒற்றுமைய காட்டிட்டி, ஒருவரை ஏகப் பிரதிநிதியாக சனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது நல்லது. அல்லது 3ம் தரப்பு மத்தியஸ்தத்துடனான பேரம் பேசலில் ஈடுபடவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக, சுயேட்சையாக களமிறங்க கட்டுப் பணத்தை செலுத்தியுள்ள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான, திரு.எம்.கே சிவாஜிலிங்கம் ஐயாவை நகைச்சுவையாக பார்ப்போருக்கு...........

1. அரசியல் பயணம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர், அதற்காக முன்னிற்பவர்.

2. சிங்களப் பேரினவாதம் பல தடைகளை ஏற்படுத்திய போதிலும் ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்பட்ட போதிலும், அவர் தமிழர் அரசியலில் வினைத்திறனுடன் இயங்கி வருபவர்.

3. பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அஞ்சி மாவீரர் தினங்களை நடாத்த அனைவரும் பயந்து நிற்கையில், முன்னின்று நடாத்திக் காட்டியவர்.

4. பல மாவீரர்களுக்கான, தியாகிகளுக்கான அஞ்சலிகளை இப்போதும் இந்த வயதிலும் ஓடி ஓடிச் சென்று நிகழ்த்திக் காட்டும் ஒருவர்.

5. காணி சுவீகரிப்பு, மற்றும் இதர விடயங்களில் நேரடியாக தனது எதிர்ப்புகளை காட்டி, பல வழக்குகளில் இப்போதும் ஆஜராகி கொண்டிருப்பவர்.

6. தமிழர்களுக்கான போராட்டங்களில் முன்னின்று கலந்து கொண்டு குரல் எழுப்புவது, தமிழர் தாயகத்துக்காக சர்வதேச அளவில் குரல் கொடுப்பதால் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் அடிக்கடி அழைக்கப்படுபவர்.

7. தமிழர் தாயகப் பகுதியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்த நாள் தொடக்கம், இன்று வரை ஓயாமல் பல போராட்டங்களை முன்னெடுத்து, தமிழ்த்  தேசியத்தை மக்கள் மத்தியிலே நிலையில் எரிபற்று நிலையில் பேணிப் பாதுகாக்கும் ஒருவர்.

8. ஐ.நா அமர்வுகளில் ஒவ்வொரு வருடமும் பல சிரமங்களுக்கு மத்தியில் சென்று தமிழர்களுக்காக உரிமை குரல் கொடுப்பவர். அங்கு சிங்கள மேலாதிக்க வாதிகளுடன் நேரடியாக வாதத்தில் ஈடுபடுபவர்.

9. தீவகத்தில் பிரச்சாரத்தின் போது காலிலே வாள் வெட்டுக்கு இலக்காகி உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும், மீண்டும் துணிச்சலாக தமிழ் அரசியல், தமிழர் உரிமை பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிற தமிழர்களின் வேணவாக்களை வெளிப்படுத்தி நிற்கின்றன ஒருவர். அதே ஏலாத காலோடு பல போராட்டங்களை ஓயாமல் நடாத்துபவர்.

10.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, பாராளுமன்ற குழுவிலும், தற்போது ஒருங்கிணைப்பு குழுவிலும் கூட்டமைப்பு தலைமையிடம் நிற்க வைத்து கேள்வி கேட்பவர்.

11.வடக்கு மாகாண சபையில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த போது அதை நடுநிலையாக நின்று சமரசம் செய்தவர்.

12.வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொணரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக முன்னின்று அவரது கதிரையை காப்பாற்றியவர்.

13.தேசிய தலைவர் அவர்களது தாயாரின் உடலைக் கூட காண பலர் பயப்பட்ட, இரங்கல் தெரிவிக்க தயங்கிய வேளையில் (இப்போது புலி வீரம் விளாசும் முண்ணணியின் முன்னணியினர் கூட) அம்மையாரின் உடலை அவரது சொந்த ஊரில் தகனித்து காட்டியவர். இவ்வாறு பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்போது சொல்லுங்கள் ...... சிவாஜிலிங்கம் நகைச்சுவையாளனா? நாயகனா? அவர் சிறீலங்காவின் சனாதிபதி பொது வேட்பாளராக களமிறங்கவல்ல தமிழர் தேசத்துக்கே முதலமைச்சராகும் தகுதி, தகமை உள்ளதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இவ்வளவு ஒரு திறமை சாலியை தங்கள் தங்கள் சுய நலத்துக்காக மக்களிடம் இல்லாதது, பொல்லாததுகளைக் கூறி அவரின் மதிப்பை கெடுக்கும் அரசியல் வாதிகளுக்கு வாக்களிக்கலாமா? இல்லை கட்டப் பொம்மன் மாதிரி துணிந்து நிற்கும் தன்மானத் தமிழன் சிவாஜி லிங்கத்தை கட்சி பேதமின்றி ஆதரவளிக்கப் போகின்றீர்களா?

சிவாஜிலிங்கத்தின் இந்த துணிச்சலான செயலை துணிவுள்ள இன்னோர் தமிழன் ஏன் செய்ய முன்வரவில்லை?

இந்தப் பதிவை திருப்பி திருப்பிப் படியுங்கள். எங்கள் ஒரு தலைமுறையை என்றாலும் நன்றாக வாழவைக்க பாடுபடுவோம். சிவாஜிலிங்கம் யாரைக்கேட்டு கட்டுப் பணம் கட்டினார் என்பதனை மறப்போம். யாருக்காக கட்டினார் என்பதனை நினைப்போம்.புலம்பெயர்ந்த தமிழர்களின்  வேண்டுகோளின் அடிப்படையிலேயே வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியுள்ளார்.

நன்றி: இந்திரன் ஞானி

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com