கிளிநொச்சியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!


கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது.

 “கிளிநொச்சி பகுதியில் பாரிய போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கெப்பற்றி கொல்லாவ மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும்- வாடகைக்கு வாகனம் ஒன்றில், தகவல் வழங்கிய நபருடன், அறிவியல் நகர் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

அதேவேளை, கிளிநொச்சி பொலிஸாரும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிவில் உடையில் சென்ற பொலிஸார் மதுவரித் திணைக்களத்தினர் பயணித்த வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர்.

இந்த நிலையிலேயே, வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். இதில் தகவல் வழங்கிய நபர் காயமடைந்துள்ளார்.

இதன் பின்னரே, காரில் பயணித்தவர்கள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com