யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!-சுரேஷ்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகளுக்கு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த பணிகளுக்காக தென்னிலங்கையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். குறிப்பாக எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மாகாணத்திலேயே எமது இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com