23/11/2019 மாவீரர் வாரத்திற்குள் புனிதப்படுகிறது தமிழர் தேசம்!

இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தமிழினத்தின் வழிகாட்டியாக வரலாறு இரு விடயங்களை விட்டுச் சென்றுள்ளது.

01. மாவீரர்கள்
02. நந்திக்கடல்

இந்த இரு கண்ணிகளினதும் ஒட்டு மொத்த குறியீடாக – திரட்சியாக தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரதிநிதித்துவமாகிறார். நந்திக்கடல் எமது போராட்டத்தின் வழிகாட்டியாக மட்டுமல்ல, உலகின் போராடும் இனங்களின் வழிகாட்டியாக புதிய உலக ஒழுங்கிற்கான அறைகூவலாக தன்னை நிறுவுவதனூடாக இந்த நூற்றாண்டின் புதிய தத்துவ கோட்பாட்டின் மைய அச்சாக விளங்குகிறது.

அதையே ‘பிரபாகரனியம்’ என்று வரலாறு விளிக்கப் போகிறது. உலக வரைபடம் என்பது வேறு, உலக அரசியல் வரைபடம் என்பது வேறு. இந்த உலக அரசியல் வரைபடத்திலும் இரு வகை உள்ளது. ஒன்று உலகளாவிய ஏகாதிபத்திய, வலது சாரி முதலாளித்துவ அரசுகள் வரைந்து வைத்திருப்பது.

இரண்டு புரட்சிகள், போராட்டங்களினூடாக தம்மை விடுவித்த இடதுசாரி அரசுகள் வரைந்து வைத்திருப்பது. இவை இரண்டுமே ‘நந்திக்கடலில்’ வைத்து அழித்தொழிக்கப்பட்டது. முன்னையது ‘முள்ளிவாய்க்காலுக்கும்’ பின்னையது ‘நந்திக்கடலுக்கும்’ வழி கோலியது.

விளைவாக உருவானதே இனி வரப் போகும் மனித குல வரலாற்றின் அதி உன்னத தத்துவமான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள். எனவே நாம் நினைவு கூரலின் பெறுமதியை உணர்ந்து மாவீரர்களை வணங்குவோம். மிகுதியை வரலாற்றில் நந்திக்கடல் எழுதும். ஏனென்றால் அது ‘பிரபாகரனியத்தை’ உட் செரித்திருக்கிறது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com