மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு , அரசியல் கைதிகள் விடுதலை!- சஜித்தின் தேர்தல் அறிக்கை!


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

மகாநாயக்கர்களிடம் தேர்தல் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார். மகாநாயக்கர்களிடம் தேர்தல் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன் பாடுகளையும் மீளாய்வு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன் பாட்டுக்கும் தாம் கட்டுப் படவில்லை என்றும், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில், நடந்த நிகழ்வில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது, இதில் ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்றும், நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர் விடுதலை செய்யப்படுவர் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், ஆகிய வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு-

 *போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர். பலமான தேசத்தை உருவாக்குதல்,

*தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்,

*மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு, நாடாளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு,

*இலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை, நவீன, *பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு,

*நீதியும் சுதந்திரமுமான ஊடகத்துறை,

*பேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை,

*போட்டித் தன்மை மிகு பொருளாதாரம்,
*மலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு,
*பொருந் தோட்டங்களை தரம் உயர்த்துதல்,
*நீதியான சமூகத்தை கட்டியமைத்தல்,
*நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி,
*பயன்தரும் சுகாதார சேவை,
*35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை, *அனைவருக்கும் உறையுள்,
*2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்,
*தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம், இனம், மதம், வர்க்கம், பாலினம் *கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள், *மும்மொழிக் கொள்கை,
*நல்லிணக்கம்,
*மீள்கட்டுமாணமும்,
*நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், *வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்,
*வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான *அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்,
*நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு    விடுதலை,
*தனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று *வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் *பாடத்திட்ட சீரமைப்பு,
*இலங்கையின் ஆன்மீகம். 
*பெண்களுக்கு 52% சமவாய்ப்பு,
*மாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்,
*மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு,
*அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி,
*அனைவருக்கும் தங்குமிடம், ஆகிய திட்ட்ங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com