போர்க்குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு, ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை ஜேர்மன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2009, ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படட நிலையில் ஜேர்மனிக்கு சென்றிருந்த சிவதீபன் என்பவர் மீது போர்க்குற்ற வழக்கு சுமத்தப்பட்டு ஜேர்மன் பொலிஸார் கைது செய்தனர்.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இராணுவத்தினரை சுட்டுக்கொன்று, தீ மூட்டியதாக குற்றம்சாட்டி டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு, ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அந்த வலக்கைத் தள்ளுபடி செய்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.