ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனமும், பொதுக் கூட்டமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி தமிழர் தலைநகர் திருகோண மலையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வு "திருகோணமலை பிரகடனம்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 10.00மணிக்கு திருகோணமலை நகர சபைக்கு அருகேயுள்ள வெலிக்கடை தியாகிகள் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வில் வடக்கு கிழக்கிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.