சூடுபிடிக்கும் சிறீலங்காவின் தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்களின் வகிபாகம் என்ன?

சிறீலங்காவில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எந்தத் தரப்பாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் குறை கூறும் அரசியல் கலாச்சாரம் முதன்மை பெறும். ஊழல் வாதிகளாகவுள்ள அரசியல் வாதிகள் தாங்கள் செய்த ஊழல்களையும் குற்றச் செயல்களையும் மறைப்பதற்காக மற்றவர்கள் மீது சேறு பூசப்படும்.

இன்று நேற்றல்ல, காலம் காலமாக இடம்பெற்றுவரும் செயற்பாடாக நோக்கலாம். சிறீலங்காவின் அரசியல் அமைப்பு மற்றும் நீதித்துறையில் காணப்படும் குறைகள் மற்றும் ஓட்டைகளினுடாக அரசியல் வாதிகள் தாங்கள் விரும்பியவாறு நாட்டு மக்களை ஆட்சி செய்கின்றனர்.

மிகவும் முக்கியமானது அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை வழங்கப்பட்டமை, சிறீலங்காவில் வாழும் சிறுபான்மையினருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்குவரும் பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் அமைப்பு திருத்தப்படும், அனைத்து மக்களும் வாழும் வகையில் சீர் செய்யப்படும் என ஆட்சிக்கு வரமுன் கூறுவார்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் காலங்களில் கூறும் எதனையும் நிறைவேற்றுவதில்லை.

1948ஆம் ஆண்டு சிறீலங்காவில் இருந்து ஏகாதிபத்திய நாடான பிரித்தானியா வெளியேறிய பின்னர், சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் பேசும் சிறுபான்மையினரை தொடர்ச்சியாக தாக்கியழித்துள்ளனர்.

பெரும்பான்மை சிங்கள பேரினவாதச் சக்திகளுக்கு சிறுபான்மையினர் தேவைப்படும் போது அரவணைப்பது போன்று பாசாங்கு காட்டுவதும், தேவையில்லாத போது அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் தான் சிங்கள பேரினவாத சக்திகள் செயற்பட்டுள்ளமை வரலாற்று உண்மை.

பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் மொழி உரிமை மறுக்கப்படுகிறது, சிங்களக் குழப்பம் ஏற்பட்டு தமிழர்கள் அழிக்கப்டுகின்றர்கள்.

அதன் பின்னர் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சுமார் 18 வருடங்கள் ஆட்சி செய்தனர். இந்த ஆட்சிக் காலத்தில் தான் தமிழ் இனம் என்றுமே சந்திக்காத பெரும் துன்பியல் சம்பவங்களை எதிர் நோக்கினர்.

கறுப்புயுகம் ஒன்றை அனுபவித்தனர். உயிரிழப்பு மாத்திரமல்ல, தமிழர்களின் பொருளாதாரம் முற்றாக அழிக்கப்பட்ட காலகட்டம். இந்த கொடுமைகளை செய்தவர்களுக்கு எதிராக 36 வருடங்கள் கடந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிறீலங்காவில் குற்றவியலாளர்களும், கொலையாளர்களுமே ஆட்சி செய்தின்றினர். வெள்ளைக்காரன் நாட்டை விட்டு வெளியேறிய 71 ஆண்டு நிறைவடைந்த போதும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி என இரு கட்சியுமே மாறி மாறி ஆட்சி செய்தின்றனர்.

இந்த இரு கட்சியில் கொலைகார கும்பல்தான் இவற்றையெல்லாம் விட, ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் கண் மூடிக் கொண்டிருக்க மிகப்பெரிய அழிவை தமிழ் மக்களுக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றியது.

இதற்கு இன்றுவரை நீதிவிசாரணையில்லை. சர்வதேசமும் இதில் கரிசனை எடுப்பதாக இல்லை. அவ்வாறான நிலையில் இன்று கொலைகாரர்கள் போட்டி போடும் தேர்தல் நடைபெறவுள்ளது.

பேரினவாத சக்திகளினால் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்படும் தமிழ் பேசும் இனத்தின் தலைவர்கள், அன்று தொட்டு இன்றுவரை இச்சக்திகளின் ஊது குழலாகத்தான் செயற்படுகின்றர்கள். கொலைகாரர்கள் காலத்திற்கு காலம் கொலைகளை அரங்கேற்றி முடிவடைய அதற்கு சலாம் போடும் கட்சிகளாக தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஆட்கெலை, ஆட்கடத்தில், சொத்து ஊழல் என மிகப்பெறும் கொலைக் குற்றங்களை மேற்கொண்ட சர்வதேச போர்க் குற்றவாளியான கோத்தா ராஜபச்ஷவை ஆதரிக்கப் போவதாக தமிழ் இனத்தின் துரோகங்கள் அணைத்தும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இவர்கள் ஒன்றிணைவது எதற்கான? தமிழ் மக்களுக்கு அரசியலில் என்ன செய்ய போன்ற கேல்விகள் எழுகிறது. இந்த தேர்தலில் தமிழர் மக்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். மறுபக்கத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடங்கிய கோரிக்கைகளை பரிசிலனை செய்ய நேரம் இல்லாத கட்சியை ஆதரிப்பதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆனால், மக்களை பொறுத்த வரையில் அரசியல் ஞானம் என்பது மிகவும் குறைவுதான், அதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையால் சிங்கள கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் கட்சிகளும் ஈடுபடுகின்றனர். கொள்கையுடன் உள்ளவர்கள் இந்த தேர்தல் களத்தை உரிய முறையில் பயன்படுத்தினாலும், சாதாரண மக்களைப் பொறுத்த வரையில் சிங்கள பேரினவாத சக்திகளின் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஒப்பிட்டு அளவு செய்வார்கள்.

அதாவது, கோட்டாவை விட சஜித் பரவாயில்லை என்ற ஒப்பிட்டளவு முன்னெடுக்கப்படும். மக்கள் மத்தியில் உள்ள இந்த தெளிவற்ற நிலையை விளக்குவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு திராணியில்லை. கொள்கை பற்றிப் பேசுபவர்கள் மக்களை தெளிவுபடுத்துவதனுடாக சில மாற்றங்களை எதிர்பாக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு எம்மவர்களில் எத்தனை பேர் தயார்? இதனைப் போன்று புலம் பெயர் நாடுகளிலுள்ளவர்கள் இதனைச் செய்வதற்கு தயார் இல்லை. காரணம் சிலர் தங்கள் பொருளாதார மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதனால் சிறீலங்காவில் ஆட்சிக்கு வருபவர்பளுடன் டீல் பேசும் நிலையில் உள்ளதால் தமிழ்த் தரப்பின் எதிர் பார்ப்புக்கள் எந்தளவில் நிறைவேறும் என்பது கேள்விக் குறிதான்.

கொள்கையுடன் செயல்படுபவர்கள் எந்தொரு சிங்களப் பேரினவாத சக்திகளுக்கும் வாக்களிக்க முன்வரமாட்டார்கள். இந்த இக்கட்டான சூழ் நிலையில் தாயகப் பகுதியில் உள்ளவர்கள் நன்றாக சிந்தித்து தங்கள் உரிமையான வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல்படுவதனால் மலை போல் அல்லா விட்டாலும், கடுகு போலாவது பயன்பெறலாம் என்பது நிதர்சனம்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com