தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார் சிவாயிலிங்கம்!


ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார்.

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின்உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் வணக்கம் செலுத்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். 

நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் அவர்கள், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், திருகோணமலை பிரகடனமாக நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய இன்று சிவகுமாரனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர், தனது தேர்தல் பிரச்சாரத்தை யாழில் ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய யாழில் சாவகச்சேரியில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தையும் நடாத்தியிருந்தார்.

Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com