பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!-வவுனியா வடக்கு


வவுனியா வடக்கு கனகராஜன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தர்மிலன் யாழ் பல்கலைக்கழக மாணவன் நேற்று காலை முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு, தேடுதலின் பின்னர், இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள்ளிருந்த மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கனகராஜன் குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழ மாணவன் தடி வெட்டுவதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தார்.

நேற்று மாலை நீண்ட நேரமாகியும் குறித்த மாணவன் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கனகராஜன்குளம் காவல் துறை, அப்பகுதி இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்ட இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதலை மேற்கொண்ட போது காட்டுற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று காவல் துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதவானின் வருகையின் பின்னர் மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் கனகராஜன்குளம் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com