கொடூரக் கொலையாளியை மன்னித்து விடுவித்த மைத்திரி!


ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை, கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ என்ற கொலைகாரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளி ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரு வேறு ஜனாதிபதி மன்னிப்புக்களை அடுத்து அவர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4.30 மணிக்கு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியேறியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) பந்துல ஜயசிங்க உறுதி செய்தார்.

மரண தண்டனை விதிக்கப்ப்ட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு ஜனாதிபதியின் பூரண மன்னிப்பு கிடைத்துள்ளது. அதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே. டப்ளியூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com