மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு!


1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணா நோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது.

யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. திருமலைச் சந்திரனுடன் பலர் இப்பாடலை பாடினார் இந்தியப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளை தமிழ்நாட்டில் புதுவை அண்ணரின் முயற்சியால் புயல் கால இராகங்கள் அந்நியர் வந்து புகல் என்ன சூதி, களத்தில் கேட்கும் கானங்கள், பாசறைப் பாடல்கள், என்பன ஒலிப்பேழைகளாக வெளிவந்தன.

1990 இல் யாழ்ப்பாணத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற ஒலிப்பேழை வெளியீட்டுடன் பல ஒலிப்பேழைகள் வெளிவரத் தொடங்கின வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிப்பேழைக்காக புதுவை அண்ணரால் எழுதப்பட்ட பாடலை தலைவர் மாவீரர் நாளுக்குரிய பாலடலாகக் வேண்டுமென விரும்பியதையடுத்து அந்தப் பாட்டில் சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான பாடலாக வெளிவந்தது.

கண்ணனின் இசையில் வர்ண இராமேஸ்வரனுடன் பலர் அதை பாடினர். அதில் முதல் நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே… ஏன்றிருந்த வரி பின்பு மாவீரர் நினைவொலி நேரம் மாற்றப்பட்டபோது வல்லமை தந்துமே என மாற்றப்பட்டது.

இந்ந மாற்றப்பட்ட வடிவமே இன்று நாம் கேட்கும் பாடலாகும். மாவீரர்களை புதைக்கத் தொடங்கிய பின்னே மாவீரர் மயானம் சுடுகாடு, மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்டது.

1990 இல் மாவீரர் விபரப் பட்டியலை கூராக்கும் பணி தலைவரால் என்னிடம் தரப்பட்டது. மாவீரர் படங்கள் அவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. மாவீரர் விபரங்கள் அப்போது ஈழமுரசு செய்தித் தாளில் வெளியிடப்பட்டு எம்மிடம் இருந்து. தவறுகள் திருத்தப்பட்டன. இராதயன் அண்ணரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அங்கு மாவீரர் படங்களை தாங்கிய மாவீரர் ஏடு ஒன்று அச்சிடப்பட்டது.

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை அதிலிருந்த தகவல் தவறுகள் காரணமாக அதனை வெளியிட வேண்டாமென தலைவர் கூறியதையடுத்து அது வெளியிடப்படவில்லை.

1990இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பு தரப்படுகின்றது.

1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவுகூரற் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது.

அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கோண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.

திரு.யோகரட்ணம் யோகி
(2007 ஆம் ஆண்டு)

** மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும்.

புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார்.

முழுப் பாடல்

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! 

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! 

தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே!

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்! வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்! 

சாவரும் போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும் போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!

எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழைகளே!

உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்! உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்! தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com