ஐந்து கட்சிகளும் தவறிழைத்து விட்டன! பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள்- மாணவர் ஒன்றியம்


ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் 13அம்சக் கோரிக்கைகளை விட சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வலுவற்றதாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேதமதாஸவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடிப் பேசிய போது, மூன்று மாததத்தில் தீர்க்கக் கூடிய விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் இல்லையெனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என முயற்சி செய்தோம். அதன் அடிப்படையில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்தோம். அதன்படி 13 பிரதான கோரிக்கைகள் அறிக்கையிடப்பட்டது.

அதில் மேலதிகமாக இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியது அதை ஏற்றுக்கொள்ளப்படாததால் பேச்சுவர்த்தையில் இருந்து அவர்கள் வெளியேறினார்கள். பின்னர் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைகளில் கையொப்பம் இட்டு தென்னிலங்கயைிலுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நேரடியாக பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.

எனினும் நேரடியாகப் பேசுவதற்காக சரியான அணுகுமுறைகளை கையாளவில்லை தென்னிலங்கைத் தரப்புடன் பேசும் விடயத்தில் ஐந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் தவறிழைத்துள்ளது. மேலும் 13 அம்சக் கோரிக்கைகளையும் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரித்தால் ஜனாதிபத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என மீண்டும் கூடிப்பேசுவதாக இணக்கம் காணப்பட்டது.

எனினும் எமது தமிழ்த் தலைமைகள் மாணவர்களாகிய எங்களையும் தமிழ் மக்களையும் முட்டாள் ஆக்கி விட்டனர். குறிப்பாக ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடிப் பேசிக்கொண்டிருந்த போது முதலாவதாக முந்திக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்கினேஸ்வரன் ஒற்றுமையை சிதறடித்தார்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இந்த விடயம் தவறான அணுகு முறையாகும் கட்சிகள் ஒன்றுகூடி கதைக்கும் போது தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருவது என நாம் ஆராய்ந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என கோருவோம் என்றார்.

அதை எழுதியும் தந்தார். அதையே நாம் அன்று ஊடகங்கள் முன்னிலையில் வாசித்தோம் அன்று நடந்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவில்லை. அது வந்தவுடன் நாம் முடிவு எடுப்போம் ஏனெனில் நாம் முன்வைத்துள்ள 13அம்சக் கோரிக்கைகளில் பல உள்ளடக்கப்படும் என நம்புவதாக கூறினார். அதற்கு எமக்கு கடிதமும் தந்தார் . ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின்னர் யாருடனும் கலந்தாலோசிக்காது தமிழ்த் தலைமைகள் தாமாகவே முடிவு எடுத்து விட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் 13அம்சக் கோரிக்கைகளை விட சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வலுவற்றதாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேதமதாஸவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடிப் பேசிய போது, மூன்று மாததத்தில் தீர்க்கக் கூடிய விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் இல்லையெனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்..
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com