கோத்தாவின் பதவியேற்பும், படுகொலையின் நினைவேந்தலும்!


கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது, (18-11-2006) வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தால் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு நினைவுச் சுடர்ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு ஒன்றுவிவசாயக்கல்லுரி மாணவர்களால் நடாத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக் கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் சங்கரலிங்கம் கிந்துஜன், சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான்,சுந்தரலிங்கம் ஜங்கரன் திருநாமம் சிந்துஜன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com