மணல் அகழ்வுக்கு எதிராக யாழ். நகரில் இன்று போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.

அதே போன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

இதற்கமைய நாளை யாழ்.மத்திய பேருந்த நிலையத்தில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com