தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்படும் விகாரை!

யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி.வடக்கில்
தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து விகாரை அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் முன்வர வேண்டும் என்று வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 “வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் குறித்த விகாரையை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com