கரைச்சி பிரதேச சபையின் மற்றொரு முறைகேடு RTI மூலம் அம்பலம்


மத்திய கல்லூரிக்கு பின் வீதி எம்மால் புனரமைக்கப்படவில்லை - கரைச்சி பிரதேச சபை, வீதி புனரமைக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை கோரியுள்ளோம் -உள்ளுராட்சி உதவி ஆணையாளர்

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரிக்கு பின் வீதி புனரமைப்பு தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடமும், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரிய போது, இரண்டு நிறுவனங்களும் இருவேறு தகவல்களை வழங்கியுள்ளனர்.

எவ்வித சட்ட நடவடிக்கைகளும் பின்பற்றப்படாது தவிசாளரினால் வீதி புனரமைப்புக்கு ஒப்பந்த காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரி பின் வீதியானது ஒப்பந்தகாரர் ஒருவரினால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தீடிரென வீதி புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. ஆதாவது செலவு திட்டமதிப்பீடுகளோ புனரமைப்பிற்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்படாது தவிசாளரின் வாய்மொழி மூல அறிவித்தலுக்கு அமைய எவ்வித சட்ட திட்டங்களுக்கும் உட்படாது வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் கணக்காய்வு திணைக்களத்திற்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஊடாக வினவிய போது குறித்த வீதியானது தங்களினால் புனரமைக்கப்படவில்லை எனவும் அதற்கான மதிப்பீடுகளோ, ஒப்பந்தமோ கைச்சாத்திடப் படவில்லை என பதிலளிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் ஊடாக வினவிய போது குறித்த வீதி புனரமைப்பு யாரால் மேற்காள்ளப்பட்டது என்று ஆராயுமாறு கரைச்சி பிரதேச சபை செயலாளரினால் தொழிநுட்ப உத்தியோகத்தரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது எனவும், குறித்த வீதியானது யாரால், எந்த நிதியில், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற ஆவணங்களுடன் தொழிநுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையினையும் பெற்று அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளனர்.

ஆனால் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் எவ்வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாது இதுவரைக்கும் 10 இலட்சம் ரூபா வரை செலவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு தொடர் அபிவிருத்திக்குரிய கண்டக் கல் என்பனவும் இறக்கப்பட்டும் காணப்படுகிறது. எனவே குறித்த வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இருப்பதனால் உரிய திணைக்களங்கள் விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் எதிர் தரப்பு உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com