மீண்டுமொரு அரசியல் கைதி 27 வருடங்களாக சிறையிலிருந்து நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ளார்-அரசியல் சாணக்கியன்

மீண்டுமொரு அரசியல் கைதி 27 வருடங்களாக சிறையிலிருந்து நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் அரசியல் கைதிகள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள்...

ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினரும் மற்றும் பாரிய குற்றங்களை செய்த சிங்களவர்களும் தண்டனை குறைக்கப்பட்டு குறுகிய காலத்தில் விடுதலை செய்யப்படுகிறார்கள்...

ஆனால் நாம் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ச்சியாக அனைத்து வழிமுறைகளிலும் பழி வாங்கப்பட்டு கொண்டிருக்கின்றோம் இனரீதியாக...


ஐயா சம்பந்தன் அவர்களே. கையைத் தடவி கண்ணை அகலவிரித்து இவர்தான் ஜனாதிபதி என்று கண்டுபிடிக்கும் சூழ்நிலையில் நீங்கள் உள்ளீர்கள்...இந்த வயதிலும் 5 ஊழியர்களுடன் ஆடம்பர மாளிகையில் வாழ்க்கை கொழும்பில் வாழ்ந்து கொண்டு அனைத்து சுகபோகங்களையும் இறக்கும் தருவாயில் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும் நீங்கள்...வாழ வேண்டிய வயதில் சிறைச்சாலைக்குள் எத்தனையோ தமிழ் கைதிகள் தமிழ் தலைமைகளால் எமக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்...

நீங்களும் சரி உங்கள்  கூட்டமைப்பு உறுப்பினர்களும் சரி. காலத்துக்குக் காலம் மாறும் அரசாங்கத்திடமிருந்து சுகபோக வாழ்க்கை களையும் பதவிகளையும் பணத்தையும் எதிர்பார்க்கிறீர்கள்...
பிணம் தின்னும் கழுகு கூட இறந்த உடலை தான் உண்ணும் ஆனால் ஒரு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத நீங்கள்  பிணம் தின்னும் கழுகு களைவிட மோசமான பிறவிகள்.....

கடைசித் தமிழ் அரசியல் கைதி சிறையிலிருந்து இறக்கும் வரையில். உங்களின் சுகபோக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டுதான் தான் இருக்கும்.இது தமிழருக்கு கிடைத்த சாபக்கேடான  அரசியல் தலைமை..
தமிழ் இனம் சார்ந்த விரும்பிகளே. முடிந்தவரை இவர்களை மக்கள் முன் காணும்பொழுது. உங்கள் எதிர்ப்புகளை காட்டுங்கள் மாறுபட்ட கோணத்தில். வீதியில் இறங்கி நடமாடுவதற்கு மக்கள் முன் வருவதற்கு தகுதியற்றவர்கள்  அரசியல்வாதிகள் இவர்கள்...
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com