பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை ஆக்கிரமிக்கும் விகாரைகள்!

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் மத முரண்பாட்டை உண்டாக்கும் வகையில் பல்கலைகழக ஒழுங்கை மீறி விகாரை மற்றும் பள்ளிவாசல் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கடந்த வருடம் நான்கு மதங்களுக்குமான ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டினார்கள். நாட்டப்பட்டு சில மாதங்களின் பின் விகாரையும் பள்ளிவாசலும் அதிக பணச்செலவில் பிரமாண்டமாக கட்டப்படுவதுடன் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான விடுதிகளும் கட்டப்படுகிறது.

அதேவேளை அவ்வளாகத்தில் பிள்ளையார் ஆலயம் ஒரு மரத்தின் கீழ் சிறிய குடிசை ஒன்றிலேயே இயங்கி வருகிறது, அதே போன்று கிறிஸ்தவ தேவாலயம் எந்தவிதமான கட்டுமானங்களும் இல்லாமல் காட்சி அளிக்கின்றது.

பௌத்த விகாரைக்கும், பள்ளிவாசலுக்கும் பல்கலைக் கழக ஒழுங்கை மீறி பெருமளவு நிதி வெளியிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

பிரபல செய்திகள்

தமிழர் நிகழ்வுகள்

புகைப்படங்கள்

தொடர்புகொள்ள

Name

Email *

Message *

 
Support : Eelanila.com | Lttefm.com | SRifm.uk
Powered by Eelam5.com
Copyright © 2020. ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com